வேலையற்ற பட்டதாரிகளுக்கு அண்மையில் நடத்தப்பட்ட நேர்முகத்தேர்வையடுத்து இம்மாதம் 20ம் திகதி 4,053 பட்டதாரிகள் சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர் என்று தேசிய கொள்கை மற்றும் பொருளாதார விவகார அமைச்சிலிருந்து கிடைக்கப்பெறும் உத்தியோகப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
பயிற்சிக்காக இணைத்துக்கொள்ளப்படும் குறித்த பட்டதாரிகள் உள்ளவாரி பட்டப்படிப்பை பூர்த்தி செய்தவர்களாவர் என்று அமைச்சின் மேலதிக செயலாளர் அசங்க தயாரத்ன தெரிவித்துள்ளார்.
மேலதிகமாக உள்ள 15,000 வேலையற்ற பட்டதாரிகளை இவ்வருட இறுதிக்குள் சேவையில் இணைத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சின் தகவல் வட்டாரம் தெரிவித்துள்ளது. எது எவ்வாறு இருப்பினும் குறித்த விடயங்கள் தொடர்பான உத்தியோகப்பூர்வ ஊடக அறிக்கைகள் இதுவரையில் வௌியாகவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.