வேலையில்லா பட்டதாரிகளுக்கான நேர்முகத்தேர்வு 16ம் திகதி ஆரம்பம்

வேலையில்லா பட்டதாரிகளை அரச சேவையில் இணைத்துக்கொள்வதற்கான நேர்முகத்தேர்வு இம்மாதம் 16ம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார அமைச்சின் மேலதிக செயலாளர் அசங்க தயாரத்ன அறிவித்துள்ளார்.

2018ம் ஆண்டு ஜூன் மாதம் 30ம் திகதி வரை பட்டம் பெற்று தம்மை பதிவு செய்துக்கொண்வர்களுக்கு பிரதேச செயலகங்களில் இந்நேர்முகத்தேர்விற்கு நடைபெறவுள்ளது.

இந்நேர்முகத்தேர்வில் தோற்றி தெரிவு செய்யப்படும் பட்டதாரிகள் 2019ம் ஆண்டில் அரச துறையில் நிலவும் வெற்றிடங்களுக்கமைய சேவையில் இணைத்துக்கொள்ளபடுவர் என்று மேலதிக செயலாளர் தெரிவித்துள்ளார்.

சுயாதீனமாக நடத்தப்பட்ட கணக்கெடுக்கொன்றுக்கமைய நாட்டில் சுமார் 62,000 வேலையில்லா பட்டதாரிகள் உள்ளனர் என்று கணிப்பிடப்பட்டுள்ளது. இவர்களில் 20,000 பேருக்கு இவ்வாண்டு இரண்டு கட்டங்களாக நியமனங்கள் வழங்குவதாக அரசாங்கம் உறுதியளித்திருந்தபோதிலும் இதுவரை அந்நியமனங்கள் வழங்கப்படவில்லை. செப்டெம்பர் மாதம் வழங்கப்படும் என்று தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார அமைச்சு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நன்றி- தினகரன்

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435