வேலையில்லா பட்டதாரிகள் நியமனம் பிற்போடப்பட்டுள்ளது

வெட்டுப்புள்ளி வழங்குவதில் உள்ள பிரச்சினைகளை தீர்க்கும் வரையில் வேலையில்லா பட்டதாரிகளை சேவையில் இணைத்துக்கொள்ளும் திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நேற்றுமுன்தினம் (19) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

வேலையற்ற பட்டதாரிகளை பயிற்சியில் இணைத்துக்கொள்ளும் முதலாம் கட்ட நடவடிக்கையில் நேர்முகத்தேர்வில் பங்குபற்றிய பட்டதாரிகள் வழங்கிய மாவட்ட மட்ட வெட்டுப்புள்ளி மாற்றப்பட்டமையினால் சில மாவட்டங்களில் அநீதி இழைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் அமைச்சரவை கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. குறித்த வெட்டுப்புள்ளி காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் 914 பட்டதாரிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் பொலன்னறுவை மாவட்டத்தில் 32 பேர் மட்டுமே தெரிவாகியுள்ளனர். நிலஅளவு மற்றும் சனத்தொகையுடன் ஒப்பிடுகையில் பொலன்னறுவை மாவட்டத்தில் பாரிய அசாதாரணம் இழைக்கப்பட்டுள்ளது என தொடர்ச்சியாக ஊடகங்களில் செய்தி வௌியாகியது.

வெட்டுப்புள்ளி எல்லைக்கமைய அதிக எண்ணிக்கையான பட்டதாரிகள் பதிவு செய்யப்பட்டிருந்த குருணாகலை மாவட்டத்தில் இருந்து 300 பேர் தெரிவாகியுள்ளனர். எது எவ்வாறு இருப்பினும் சகோதர மொழிப் பத்திரிகையான ‘மவ்பிம’ மேற்குறித்த விடயம் தொடர்பில் தகவல்களை வௌியிட்ட பின்னர் பொருளாதார விவகார அமைச்சு குறித்த வெட்டுப்புள்ளியை மாற்றம் செய்வதற்கு தீர்மானித்துள்ளதுடன் அதற்கான அமைச்சரவை தீர்மானத்தை பெறுவதற்கான முன்மொழிவை அமைச்சரவைக்கு அனுப்பியுள்ளது. குறித்த பட்டதாரிகளுக்கு எதிர்வரும் ஜூலை மாதம் இரண்டாம் திகதி நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.

எவ்வாறு இருப்பினும் தற்போது பட்டதாரிகளை இணைத்துக்கொள்ளும் இரண்டாம் கட்ட நடவடிக்கைக்காக விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே முதலாம் கட்ட நடவடிக்கையில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ள நிலையில் இரண்டாம் கட்ட நடவடிக்கையும் கேள்விக்குறியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435