வேலை செய்யுமிடத்தில் பாரபட்சமாக நடத்தப்படுகிறீர்களா?

இலங்கையின் அரசியலமைப்பின் பிரகாரம் அனைவரும் சசட்டத்தின் முன் சமனாகவே கருதப்படுவர். சட்டத்தின் சமனான பாதுகாப்பிற்கும் உரித்துடையவராக இருக்கின்றனர்.

அது பால்நிலை உட்பட பல்விதமான அடிப்படைகளிலான பாரபட்சங்களைத் தடைசெய்கிறது. எவ்வாறாயினும் அரசியலமைப்பிலோ அல்லது தொழிற்சட்டங்களிலோ சம பெறுமதியான வேலைகளுக்கு சமமான கொடுப்பனவை வேண்டி நிற்கும் ஏற்பாடு ஒன்றை நாம் காண்கிறோம்.

மூலம்: 1978 ஆம் ஆண்டு இலங்கை அரசியலமைப்பின் 12

பாரபட்சமின்மை

இலங்கை அரசியலமைப்பின் பிரகாரம் இனம், மதம்மொழி, சாதி, அரசியல் கருத்து பிறந்த இடம் அல்லது அவ்வாறான அடிப்படைகளின் பிரகாரம் பாரபட்சம் காட்டப்பட முடியாது. வேலைவாய்ப்பு தொடர்பான விடயங்களில் பாரபட்சங்களைத் தடுப்பதற்கு அரசியலமைப்பிலோ அல்லது தொழில்சட்டங்களிலோ விசேட ஏற்பாடுகள் இல்லை. வேலைவாய்ப்பிலுள்ள இயலாமையுள்ள ஆட்களுக்கான பாரபட்சங்கள் மற்றும் தொழிற்சங்க செயற்பாடுகளுடன் சம்பந்தப்பட்ட பணியாளர்களுக்கு எதிரான பாரபட்சங்களினை சட்டங்கள் தடை செய்கின்றன.

அரசினால் (செயல்படுத்தும் செயல்) உண்டாக்கப்படும் அடிப்படை உரிமைகள் மீறல் தொடர்பாக உச்ச நீதிமன்றத்திற்கு விண்ணப்பிக்கின்ற உரிமையை ஒவ்வொருவருக்கும் ஸ்ரீலங்காவின் அரசியமைப்பு வழங்குகிறது. தனியார் துறை பணியமர்த்துபவர்களால் காட்டப்படும் பாகுபாடு தொடர்பாக தனி நபர்கள் தீர்வு காண முடியுமா என்பது தெளிவாக இல்லை.

மூலம்: 1978 ஆம் ஆண்டு இலங்கை அரசியலமைப்பின், §12 & 17

தொழிலின் சமமான தெரிவு

இலங்கை அரசியலமைப்பின் பிரகாரம் ஒவ்வொரு பிரசையும் ஒரு சட்டரீதியான தொழிலை வியாபாரத்தை, தொழில்முயற்சியை தானாகவோ அல்லது ஏனையோருடன் சேர்ந்தோ ஈடுபடுவதற்கான சுதந்திரத்தை வழங்குகிறது. எவ்வாறாயினும் சில தொழிற்சட்டங்களாவன தங்களைப்போன்று சில கைத்தொழில் துறைகளில் சில பெண்களின் வேலைவாய்ப்பினை ( உதா. சுரங்கத்துறை) தடை செய்கின்றன.

மூலம்: 1978 ஆம் ஆண்டு இலங்கை அரசியலமைப்பு ; 14 சுரங்கங்களில் பெண்களை வேலைக்கு அமர்த்தல் கட்டளைச்சட்டத்தின் பிரிவு 2 ; தொழிற்சாலைகட்டளைச் சட்டம் 86

வேலைத்தளம்- நன்றி- செலரி.கொம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435