முன்னணி அரச வைத்தியசாலைகளில் நீண்டகாலம் தங்கியிருந்து சிகிச்சை பெறும் மாணவர்களுக்கு கற்பிப்பதற்காக ஆசிரியர்களை நியமிப்பது தொடர்பில் கல்வியமைச்சு ஆராய்ந்து வருகிறது.
நீண்டகால சிகிச்சை பெற்றுவரும் மாணவர்களின் கல்வி நடவடிக்கையை தொடரும் நோக்கில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
கொழும்பு லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் ஏற்கனவே கற்பித்த ஐந்து ஆசிரியர்கள் ஓய்வு பெற்றதையடுத்து மேலும் ஐந்து ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
எதிர்காலத்தில் லேடி ரிஜ்வே, மஹரகம புற்றுநோய் வைத்தியசாலை மற்றும் கொழும்பு தேசிய வைத்தியசாலை என்பவற்றிலும் இவ்வாறு அதிக எண்ணிக்கையான ஆசிரியர்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர் என்று கல்வியமைச்சர் மேலும் தெரிவித்தார்.