எந்த நாட்டில் இருந்து வந்தாலும் நாளை (01) பகல் 12.00 மணிக்கு முதல் பொலிஸில் பதியுமாறு பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன அறிவித்துள்ளார்.
பதிவை மேற்கொள்ளாமல் தவிர்ப்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதி பொலிஸ்மா அதிபர் எச்சரித்துள்ளார்.
மார்ச் மாதம் 1 6ம் திகதி முதல் வௌிநாடுகளில் இருந்து இலங்கைக்கு திரும்பிய அனைவருடைய முகவரிகள் தம்மிடம் உள்ளதாகவும் பதிவை தவிர்ப்பவர்கள் இருக்கும் இடங்கள் சுற்றிவளைக்கப்படும் என்றும் பிரதி பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.