கடமைகளை பொறுப்பேற்க மறுக்கும் கிழக்கு மாகாண ஆசிரியர்கள்

கிழக்கு மாகாணத்தில் ஆசிரியர் நியமனம் பெற்ற சுமார் 200 இற்கும் மேற்பட்ட பட்டதாரிகள் தமது கடமைகளை பொறுப்பேற்காமல் புறக்கணிப்பு செய்து வருகின்றனர்.

டிப்ளோமாதாரிகளுக்கு வழங்கப்பட்ட ஆசிரிய நியமனங்களைப் பெற்ற குறித்த பட்டதாரிகள் வௌி மாவட்டங்களில் நியமனம் கிடைத்ததையடுத்தே கடமையை பொறுப்பேற்காமல் தவிர்த்து வருகின்றனர்.

இவ்வாறு நியமனம் பெற்ற ஆசிரியர்கள் கிழக்கு மாகாண சபைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் கடந்த வாரம் ஈடுபட்டனர் என்றும் இப்போராட்டத்தில் வேலையற்ற பட்டதாரிகள், இடமாற்றத்தை கோரியுள்ள ஆசிரியர்கள் என முத்தரப்பினர் இணைந்து இப்போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

கிழக்கு மாகாணத்தில் அதிக எண்ணிக்கையான வெற்றிடங்கள் இருந்த போதிலும் வௌிமாவட்டங்களுக்கு நியமனங்களை வழங்குவது நியாயமற்ற செயல் என்று அவ்வாசிரியர்கள் சுட்டிக்காட்டியே இச்சாத்வீக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435