ஸ்பெயின் மற்றும் ரொமேனியா ஆகிய நாடுகளில் தூதரகத்தை நிறுவ அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
ஐரோப்பிய நாடுகளுடனான உறவுகளை விரிவுபடுத்தும் நோக்கில் இத்தூதரங்கள் நிறுவப்படவுள்ளன.
வௌிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன சமர்ப்பித்த தூதரங்கள் நிறுவுவதற்கான அமைச்சரவைப் பத்திரத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு ஐரோப்பிய நாடான ரொமேனியாவுக்கும் இலங்கைக்கும் 1957ம் ஆண்டு தொடக்கம் நட்புறவு உள்ளது. அதேவேளை, ஐரோப்பாவின் இபேரியன் குடாநாடான ஸ்பெயினுடனான நல்லுறவு 1955் ஆண்டு ஆரம்பமானது. இவ்விரு நாடுகளுடனான உறவை பலப்படுத்தும் நோக்கில் துதரங்கள் அமையப்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
T