​கொரோனா பரிசோதனை – சட்டத்தை மீறிய சுகாதார அமைச்சு

கொரோனா வைரஸ் தொற்று குறித்து அறிவதற்கான வைத்திய பரிசோதனையை தனியார் பிரிவில் மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள சுற்றுநிருபத்தினூடாக சட்டத்தை மீறியுள்ளதாக சுட்டிக்காட்டி அரச பரிசோதனைக்கூட அதிகாரிகள் சங்கம் கடிதம் அனுப்பியுள்ளது.

குறித்த பிழையை திருத்துமாறு கோரி சுகாதார அமைச்சு மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஆகியோருக்கு இக்கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இலங்கை மருத்துவ சபை சட்டதிட்டங்களுக்கமைய, வைத்திய பரிசோதனை அறிக்கைகளை மருத்துவசபையில் பதிவு செய்த அதிகாரியினால் மட்டுமே வழங்க முடியும் என்பதும் அக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறித்த கடிதத்தின் சிங்கள மொழிமூல பிரதி கீழே தரப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435