தேசிய கல்வி நிறுவகத்தின் ஊழியர்களுடைய காப்புறுதி நன்மைகள் பல மாதங்களாக நிறுத்தப்பட்டுள்ளதாக சகோதர மொழி பத்திரிகையான திவயின செய்தி வௌியிட்டுள்ளது.
இதனால் செலுத்தவேண்டிய 20 இலட்சத்திற்கும் அதிகமான காப்புறுதி நன்மைக்கான தொகை செலுத்தப்படாதிருப்பதாகவும் தேசிய கல்வி நிறுவாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2015ம் ஆண்டு தொடக்கம் காப்புறுதி நன்மைக்கான கொடுப்பனவுகள் முறையற்ற வகையில் அதிகரித்ததுடன் அவ்வதிகரித்த நிதிக்கேற்ப நிதியத்தை பராமரிக்கத் தவறியமையே இவ்வாறு செலுத்துதவதற்கான நிதிப்பற்றாக்குறை ஏற்படுவதற்கு ஒரு காரணம் என்று தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, காப்புறுதி பெற்றுக்கொள்ளாத சிலரும் நன்மைகளை பெற்றுவருவதாகவும் தகவல்கள் வௌியாகியுள்ளன.
மேலும் காப்புறுதிக்காக பலர் விண்ணப்பித்துள்ள நிலையில், பத்தாயிரத்திற்கும் குறைந்த தொகையை காப்புறுதி தொகையை செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவ்வாறு செலுத்தினாலும் பத்து இலட்சம் ரூபா வரை பற்றாக்குறை நிலவுவதாகவும் அந்நிறுவன தகவல்கள் தெரிவிக்கின்றன.