​தொழிலற்ற பட்டதாரிகள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குக

தொழிலற்ற பட்டதாரிகளுக்கு தொழில்களைப் பெற்றுக் கொடுக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம் தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

உலகில் வளங்களில் உயர்வான வளமாகப் கணிக்கப்படுவது மனித வளங்களாகும். மனித வளங்களைத் திட்டமிட்டு முறையாகப் பயன்படுத்திய நாடுகள் அபிவிருத்தியடைந்துள்ளன. மனித வளங்களைப் புறக்கணித்த நாடுகள் வளர்ச்சியடையாத நிலையில் உள்ளன.

அந்த வகையில் தொழில் வாய்ப்புக்கோரி தொழிலற்ற பட்டதாரிகள் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களில் கவன ஈர்ப்புப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் காந்தி சதுக்கத்தில் கடந்த 21 ஆம் திகதியிலிருந்து இன்று வரை பகல் இரவாக தமது சாத்வீகப் போராட்டத்தினை நடாத்தி வருகின்றனர்.

இவ்விடயம் தொடர்பாக நேற்றைய(23) பாராளுமன்ற உரையின் போது நான் சுட்டிக்காட்டியுள்ளேன்.

மத்திய அரசாங்கம் இவ்விடயத்தில் பாராமுகமாக இருக்கக்கூடாது. கைக்குழந்தைகளை ஏந்தியவாறும் பெண்கள் போராடி வருவதை ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள் முனைப்புடன் அவதானிக்க வேண்டியுள்ளது.

இளைஞர்கள், யுவதிகள் கருத்துகளைச் செவிசாய்த்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களை விபரீதமான சிந்தனைகளுக்குத் தள்ளிவிடக்கூடாது. கடந்த காலப் படிப்பினைகளைப் பாடமாகக் கொண்டு பட்டதாரிகளின் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண வேண்டும். எனவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435