ரயில் தொழிற்சங்கங்களின் பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது

இன்று நள்ளிரவூ முதல் 48 மணித்தியாலங்களுக்கு மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்த பணிப்புறக்கணிப்பை கைவிடுவதாக ரயில் திணைக்கள தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

ரயில் திணைக்கள சாரதிகள்இ கட்டுப்பாட்டாளர்கள்இ நடத்துனர்கள் மற்றும் ரயில் நிலைய பொறுப்பதிகாரிகளால் இந்த போராட்டத்தை மேற்கொள்ள தீர்மானித்திருந்தனர்.

குறித்த தரங்களில் நிலவூம் சம்பள பிரச்சினைக்குத் தீர்வைக் கோரி முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்தை நடைமுறைப்படுத்துவதில் நிலவூம் தாமதத்திறகு எதிர்ப்பு வெளியிட்டே குறித்த பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ள தீரி;மானித்திருந்ததாக ரயில் கட்டுப்பாட்டாளர்கள் சங்கத்தின் பிரதான செயலாளர் பீ.எம்.டி. பீரிஸ் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில்இ ரயில் திணைக்கள தொழிற்சங்கத்தவர்களின் பிரச்சினையைத் தீர்க்க நியமிக்கப்பட்டுள்ள குழுவூடன் இன்று பிற்பகல் நடத்திய பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட இணக்கப்பாட்டையடுத்துஇ போராட்டத்தைக் கைவிட தீர்மானித்ததாக ரயில் திணைக்கள தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435