10 இலட்சம் வேலைவாய்ப்புக்களை உருவாக்குவதற்கான ‘சுவசக்தி’ தேசிய வேலைத்திட்டத்தில் கடன் மற்றும் நிதி உதவி வசதிகளை மத்திய வங்கியின் ஊடாக பெற்றுக்கொடுக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
10 இலட்சம் வேலைவாய்ப்புக்களை உருவாக்குதற்கான ‘சுவசக்தி’ தேசிய வேலைத்திட்டம் எனும் பெயரில் வேலைத்திட்டமொன்றை தொடர்பில் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் தொடர்பான அமைச்சின் மூலம் இலங்கை மத்திய வங்கியுடன் இணைந்து செயற்படுத்தப்படுகின்றது.
சிறு மற்றும் மத்திய வியாபார துறைகளில் வேலைவாய்ப்புக்களை உருவாக்கும் நோக்கில் புதிய வியாபாரிகள் 25,000 இனை உருவாக்குவதை விருத்திசெய்வதற்காக பிரதேச அபிவிருத்தி வங்கி மற்றும் வணிக வங்கி ஆகியவற்றின் மூலம் கடன் வசதிகளை செய்து கொடுப்பது இவ்வேலைத்திட்டத்தின் எதிர்பார்ப்பாகும்.
இதன் மூலம் சிறந்த வியாபார திட்டங்களின் திறனை கருத்திற் கொண்டு 250,000 ரூபாவிற்கு உட்பட்டதாக நிதி வசதிகளை செய்து கொடுப்பதுடன், அத்தொகையினுள் வியாபாரிகளுக்காக 50,000 ரூபா நிதியுதவியுடன், 200,000 ரூபா பெறுமதியான கடன் தொகையும் வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், இந்தக் கடன் மற்றும் நிதியுதவி ஆகிய யோசனைகளை இலங்கை மத்திய வங்கியின் ஊடாக செயற்படுத்துவது தொடர்பில் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் தொடர்பான அமைச்சர் என்ற அடிப்படையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.