1000 ரூபாவுக்கான உடன்படிக்கை இன்று கைச்சாத்தாகாது: நீடிக்கிறது இழுபறி

பெருந்தோட்ட தொழிலாளர்களது நாளாந்த வேதனத்தை ஆயிரம் ரூபாவாக அதிகரிப்பதற்காக இன்று உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு பிற்போடப்பட்டுள்ளது.

குறித்த உடன்படிக்கை, ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் முன்னிலையில் இன்றைய தினம் கைச்சாத்திடப்படும் என்றும், அந்த நிகழ்வு தொலைக்காட்சியில் நேரலையாக ஒளிபரப்பாகும் என்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் அண்மையில் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், உடன்படிக்கை தொடர்பில் தொடர்ந்தும் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டியதன் காரணமாக, இன்று உடன்படிக்கை கைச்சாத்திடும் நடவடிக்கை பிற்போடப்பட்டதாக ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் சில தினங்களில் குறித்த உடன்படிக்கை கைச்சாத்திடப்படவுள்ளதுடன், மார்ச் மாதம் முதலாம் திகதியிலிருந்து பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான ஆயிரம் ரூபா வேதன அதிகரிப்பு அமுலுக்கு வரும் என்றும் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435