1000 ரூபா சம்பளம் வழங்க முடியுமா? தேர்தல்கள் ஆணைக்குழுவின் பதில்

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளமையினால், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு மார்ச் முதலாம் திகதியில் இருந்து 1000 ரூபா சம்பளம் வழங்க முடியுமா? என்ற கேள்விக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய பதிலளித்துள்ளார்.

இது தொடர்பில் கண்டியில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்துள்ள அவர்,  பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் என கோரிக்கை நீண்ட காலமாக முன்வைக்கப்படுகிறது. கடந்த அரசாங்க காலத்திலும் சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிக்குமாறு கோரி புறக்கோட்டையிலும் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த இரண்டு வருடங்களில் அதனை வழங்குவதாக ஐந்து தடவைகளுக்கும் மேல் உறுதி வழங்கியிருப்பார்கள். அவர்களின் மார்ச் மாத சம்பளம் ஏப்ரல் மாதமே கிடைக்கும். அதனை உறுதியாக தீர்மானித்து இருந்தால், அதனால் எவரும் அரசியல் இலாபம் பெறாவிட்டால், என்னால் அது குறித்து உறுதியாக எதனையும் கூற முடியாது. அவ்வாறான கோரிக்கை தொடர்பில் ஆணைக்குழு ஆராயும். நான் தனியாக தேர்தல் ஆணையாளராக இருந்தால் உடனடியாக பதிலளித்து இருப்பேன். தற்போது மூன்று பேர் இருப்பதனால், கலந்துரையாடியே அதற்கு பதிலளிக்க வேண்டும். என்று குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435