1000 ரூபா விடயத்தில் இணக்கமின்றி முடிந்தது இன்றைய பேச்சு

கூட்டு ஒப்பந்தம் தொடர்பாக முதலாளிமார் சம்மேளனத்திற்கும், கூட்டு ஒப்பந்த்தில் கைசாத்திடும் தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையொன்று இன்று முதலாளிமார் சம்மேளனத்தில் இடம்பெற்றது.

இந்த பேச்சுவார்த்தையில் இலங்கை தொழிலாளர் காங்ரஸ் சார்பில் முத்து சிவலிங்கம் எம்.பி, இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் அதன் அமைப்பாளர் எஸ்.பி.விஜயகுமாரன், பெருந்தோட்ட தொழிற்சங்க கூட்டமைப்பின் செயளாலர் எஸ்.இராமநாதன், ஆகியோரும் முதலாளிமார் சம்மேளனத்தின் சார்பில் அதன் பணிப்பாளர் நாயகம் கனிஷ்க வீரசிங்க ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இன்று முதலாளிமார் சம்மேளனத்துடன் இடம்பெற்ற பேச்சுவார்;த்தை, இதற்கு முன்னர் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளை விடவும் முன்னேற்றகரமாக அமைந்தது என இச் சந்திப்பில் கலந்துகொண்ட பெருந்தோட்ட தொழிற்சங்க கூட்டமைப்பின் செயளாலர் எஸ். இராமநாதன் தெரிவித்துள்ளார்.

அதாவது 600 ரூபாய் அடிப்படை சம்பளத்திலிருந்து குறிப்பிட்ட தொகையை அதிகரிப்பதற்கு சம்மேளனம் இணக்கம் தெரிவித்துள்ளது. எனினும் 1000 ரூபாய் அடிப்படை சம்பளம் என்ற இணக்கப்பாடு எட்டபடவில்லை.

இந்த பேச்சுவார்த்தையில் கம்பனிகள் சார்பில் யாரும் கலந்துகொள்ளவில்லை. எவ்வாறிருப்பினும் அடுத்தகட்ட பேச்சுவார்த்தையின் போது அதிகரிக்கவுள்ள தொகை குறித்து தெரிவிக்கப்படும். அத்தோடு அந்த சந்தர்ப்பத்திலேயே ஒப்பந்த்தில் கைசாத்திட எதிர்பார்ப்பதாகவும் முதலாளிமார் சம்மேளனம் தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நாளையதினம் பெருந்தோட்ட நிறுவனங்களின் முகாமையாளர்களுக்கு இடையிலான சந்திப்பு ஒன்று நடத்தப்பட்டு, அதன் பின்னர் அடுத்தகட்டமாக தொழிற்சங்கங்களை மீண்டும் சந்திப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435