2017 பாதீடு- அரசு வைத்திய அதிகாரிகள் சங்கம் சிவப்புக் கொடி!

பாராளுமன்றில் முன்மொழியப்பட்டுள்ள 2017 வரவுசெலவு திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வேலைநிறுத்தத்தை மேற்கொள்ளப்போவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.

இம்முறை பாதீட்டில் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருக்கான சலுகைகள், வசதிகளை மேம்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதே தவிர அரச அதிகாரிகள் மற்றும் தொழில் நிபுணர்களுக்கு நன்மை பயக்கும் விடயங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன என சுட்டிக்காட்டியுள்ளதுடன் இதனை வன்மையாக கண்டிப்பதாகவும் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாகவும் சங்கத்தின் செயலாளர் டொக்டர் நவீன் டி சொய்சா தெரிவித்தார்.

அனைத்து அரசசேவைகளுக்குமான தொழிற்சங்கங்களுடன் இணைந்து இவ்வெதிர்ப்பு நடவடிக்கையை மேற்கொள்ளப்போவதாக சுட்டிக்காட்டியுள்ள செயலாளர் இந்நடவடிக்கையின் எதிர்கால திட்டம் தொடர்பில் ஆராய்வதற்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் விசேட மத்திய குழுக்கூட்டத்தை இம்மாதம் 29ஆம் திகதி கூட்டவுள்ளதாகவும் தெரிவித்தார்.

அரச ஊழியர்களுக்கான ஓய்வூதியத் திட்ட முறைமையை மாற்றியமைத்தல், அரச ஊழியர்களின் விசேட கொடுப்பனவுக்காக இதுவரை வழங்கப்பட்டிருந்த அனைத்து சலுகைளையும் ரத்து செய்தமை, புதிய வரித்திட்ட முன்மொழிவுகளினூடாக மத்திய வர்க்க அரச ஊழியர்களுக்கு அநீதி ஏற்படுத்தி உயர்தர வர்க்கத்தினருக்கு சலுகை பெற்றுக்கொடுக்கின்றமை, இரண்டாம் தொழிலுக்காக வழங்கப்பட்டிருந்த வரிச்சலுகைகள் அனைத்தையும் நீக்கியமை போன்ற பிரதான காரணங்களை முன்வைத்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வேலைநிறுத்த போராட்டத்தை மேற்கொள்ளப்போவதாக சுட்டிக்காட்டியுள்ளது.

விரைவில் அரசதுறைகளைச் சார்ந்த அனைத்து தொழிற்சங்கங்களுடன் இணைந்து அரசாங்கத்திற்கு அழுத்தம் மேற்படி விடயங்கள் தொடர்பில் அழுத்தம் கொடுக்கவுள்ளதாகவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435