
பால்நிலை சமத்துவத்தில், கடந்த 25 வருடகாலம் அடைந்த முன்னேற்றங்களை கொவிட்-19 நெருக்கடி அபகரித்து விடக்கூடும் என்பதை ஐக்கிய நாடுகள் சபையின் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.
இந்தப் பெருந்தொற்றின் தாக்கம் காரணமாக, பெண்கள், வீடுகளையும், குடும்பங்களையும் பராமரிப்பதற்கு கணிசமான அளவு கூடுதலாக வேலை செய்ய வேண்டியுள்ளது என்று ஐ.நா பெண்கள் அமைப்பின் பிரதி நிறைவேற்றுப் பணிப்பாளர் அனிதா பாத்தியா (Anita Bhatia) தெரிவித்தார்.
பெண்கள் கல்வி மற்றும் தொழில்வாய்ப்புக்களை இழந்து, உடல் ஆரோக்கிய சீர்கேட்டால் பாதிக்கப்படக்கூடும் எனவும் அவர் கூறினார்.
மூலம் : News.lk