சம்பள பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காமையினால் எதிர்வரும் 29 ஆம் திகதி நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ள உள்ளதாக ரயில்வே தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.
ரயில்வே தொழிற் சங்கத்திற்கும் சம்பள ஆணைக்குழுவின் தலைவருக்கு இடையில் இன்று முற்பகல் பேச்சு வார்த்தை இடம்பெற்றது.
அந்த பேச்சு வார்த்தை தோல்வியில் முடிவுற்ற நிலையிலேயே பணிப்புறக்கணிப்பு தொடர்பான அறிவிப்பை ரயில்வே தொழிற்சங்கம் விடுத்துள்ளது.
ரயில்வே தொழிற்சங்க பிரதிநிதிகள் நேற்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடியினர்.
இந்தக் கலந்துரையாடலும் தீர்வின்றி நிறைவு பெற்றதாக ரயில்;வே தொழிற்சங்கத்தினர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.