ஆசிரியர், அதிபர் சங்கங்கள் இணைந்து மாத இறுதியில் போராட்டம்!

31 ஆசிரியர் மற்றும் அதிபர் தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து எதிர்வரும் 26ஆம், 27 ஆம் திகதிகளில் சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட உள்ளன.

31 ஆசிரியர் மற்றும் அதிபர் தொழிற்சங்கம் இணைந்து கொழும்பில் நேற்றுமுன்தினம் (08) ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில் இதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதான செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் மற்றும் அதிபர்களின் வேதன அதிகரிப்பு, பதவி உயர்வு உள்ளிட்ட பல பிரச்சினைகளை முன்வைத்து, கடந்த மார்ச் மாதம் 13ஆம் திகதி இலங்கையிலுள்ள அனைத்து ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் இணைந்து குறித்த கோரிக்கையை முன்வைத்து, சுகயீன விடுமுறை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

எனினும், தற்போது 6 மாதங்கள் கடந்துள்ள நிலையில், குறித்த கோரிக்கைகள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று கூடிய 31 ஆசிரியர் மற்றும் அதிபர் தொழிற்சங்கம் மாநாட்டில், சுகயீன விடுமுறை போராட்டத்திற்கான தீர்மானம் மேற்கொள்ள்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேநேரம், 26ஆம் திகதி கொழும்பில் போராட்டம் ஒன்றை முன்னெக்க உள்ளதாகவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதான செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435