பொலன்னறுவை பிரதான தபாலகம் உள்ளிட்ட மேலும் 21 உப தபாலகங்களின் பணியாளர்கள் இன்று பணி புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அகில இலங்கை தபால் மற்றும் தந்தி சேவைகள் சேவையாளர் சங்கத்தின் பிரதி செயலாளர் பீ. எல். கித்சிறி தெரிவித்துள்ளார்.
பலுகஸ்தமன காரியாலயத்தின் சேவையாளர் ஒருவரை சிலர் தாக்கியமை மற்றும் தாக்கியவர்களை கைது செய்யாமை என்பவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்தப் பணிப் புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுகின்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தபாலக சேவையாளர் மீதான தாக்குதல் தொடர்பில் விளக்கமளித்துள்ள அகில இலங்கை தபால் மற்றும் தந்தி சேவைகள் சேவையாளர் சங்கத்தின் பிரதம செயலாளர்; பீ. எல். கித்சிறி, குறித்த சேவையாளரை சில தரப்பினர் நேற்று (14) தாக்கியுள்ளனர். அதன்போது தனது பதுகாப்பு கருத்தி, அந்த சேவையாளரும் அவர்களைத் தாக்கியுள்ளார்.
இதன்போது, தாக்குதல் நடத்திய தரப்பினர் தபாலகத்தை சுற்றிவளைத்து குறித்த சேவையாளரைத் தாக்க முயற்சித்தபோது, அவர் தபாலகத்தை மூடிவிட்டு உள்ளேயே இருந்துள்ளார்.
இதையடுத்து, பொலிஸாருக்க தகவல் வழங்கப்பட்டதன் பின்னர் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார், எமது சேவையாளரை பாதுகாப்பாக அழைத்துச் செல்வதாக கூறி, அவரை சிறையில் அடைத்துள்ளனர்.
தாக்கியவர்கள் வெளியே இருக்கின்றனர். தாக்குதலுக்குள்ளானவர் உள்ளே இருக்கிறார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்தப் பணிப் புறக்கணிப்ப முன்னெடுக்கப்படுவதாக அகில இலங்கை தபால் மற்றும் தந்தி சேவைகள் சேவையாளர் சங்கத்தின் பிரதம செயலாளர்; பீ. எல். கித்சிறி தெரிவித்துள்ளார்