இலங்கையின் பெருந்தோட்டத் துறையில் பணியாற்றும் தொழிலாளர்களின் வேதனத்தில் ஒருதொகை சட்டவிரோதமான முறையில் அபகரிக்கப்படுவதாக சர்வதேச ஆய்வு நிறுவனம் ஒன்றினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தொம்ஸன் ரொய்ட்டர்ஸ் பவுன்டேசன் (Thomson Reuters Foundation) என்ற நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்ட புலனாய்வின் ஊடாக இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
பெருந்தோட்டப் பகுதிகளில் வசிக்கின்ற மக்கள் சிறப்பாக நடத்தப்படுவதாக உறுதியளித்து, பெருந்தோட்ட நிறுவனங்கள் ஃபெயார் ட்ரேட் மற்றும் ரெயின்ஃபொரெஸ்ட் அலையன்ஸ் தரச்சான்றுகளைப் பெற்றுக் கொள்கின்றன.
இந்தசான்றுகள் சர்வதேச நாடுகளுக்கான தேயிலை ஏற்றுமதிக்கு வர்த்தக ரீதியான முன்னுரிமை பிரபல்யத்தை வழங்குகிறது.
எனினும் பெருந்தோட்டத் தொழிலாளர்களது வாழ்வாதார நிலைமை பின்தங்கியுள்ளமையை, ரொயிட்டர்ஸ் சுட்டிக்காட்டியுள்ளது.
குறிப்பாக அவர்களுக்கு போதிய வேதனம் வழங்கப்படாமை, சட்டத்துக்கு புறம்பான முறையில் மாத வேதனத்தில் இருந்து பெருந்தொகையான கட்டணங்கள் கழிக்கப்படுகின்றமை, தொழிலாளர்களது விருப்பம் இன்றி பல கட்டணங்கள் அறவிடப்படுகின்றமை உள்ளிட்ட விடயங்கள் வெளிக்கொணரப்பட்டுள்ளன.
இலங்கையின் பெருந்தோட்டத் துறையில் பணியாற்றக்கூடிய தொழிலாளர்களின் வேதனத்தில் ஒருதொகை சட்டவிரோதமான முறையில் அபகரிக்கப்படுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சில தோட்டங்களில் தொழிலாளர்கள் அனைத்து கட்டணங்களும் அறவிடப்பட்டப் பின்னர், வெறும் 26 ரூபாவை மாத்திரமே நாளாந்த வேதனமாக பெற்றுக் கொள்வதாகவும் தெரியவந்துள்ளது.
நுவரெலியா மாவட்டத்திலுள்ள தேயிலைத் தோட்டங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் வேதன பற்றுச்சீட்டை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இவ்வாறு தொழிலாளர்களிடமிருந்து சம்பளத்தை அபகரிப்பது இலங்கையிலுள்ள கைத்தொழில் பிணக்குள் சட்டம், தொழிலாளர் சட்டம் ஆகியவற்றிற்கு முரணாணது என சட்டவல்லுநர்கள் தெரிவித்துள்ளதாக, ரொய்ட்டர்ஸ் செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது
இது தொழிலாளர்களை அடிமைப்படுத்தலுக்கு நிகரானது என்ற அடிப்படையில், ரெயின்ஃபொராஸ்ட் அலையன்ஸ் மற்றும் ஃபெயார்ட்ரேட் அமைப்பு என்பன துறைச்சார் நிறுவனங்களது சர்வதேச நிறுவனங்கள் குறித்த விசாரணைகளை மேற்கொள்ளவிருப்பதாக அறிவித்துள்ளன.
வேலைத்தளம்