
பெருந்தோட்டத் தொழிலாளர்களது நாளாந்த வேதனத்தில் 50 ரூபா மேலதிக கொடுப்பனவை இணைப்பதற்கான அமைச்சரவை யோசனை இன்றையதினம் அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கூட்டு ஒப்பந்தம் 700 ரூபா என்ற அடிப்படை வேதனத்துடன் கைச்சாத்தான நிலையில், மேலதிகமாக கொடுப்பனவு ஒன்றை வழங்க வேண்டும் என்று தமிழ் முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தை வலியுறுத்தி வந்தது.
இதன் அடிப்படையில் அரசாங்கம் தேயிலை சபையின் நிதியில் இருந்து 1.2 பில்லியன் ரூபாய்களை பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு கடன்அடிப்படையில் வழங்கி, அதன் ஊடாக நாளாந்தம் 50 ரூபாய் மேலதிக கொடுப்பனவை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக அறிவித்திருந்தது.
இந்த கடன்தொகையை வழங்குவதற்கான அமைச்சரவை யோசனை இன்றைய தினம் முன்வைக்கப்படும் என்று பெருந்தோட்டக் கைத்தொழில்துறை அமைச்சர் நவீன் திஸாநாயக்க கடந்த வாரம் அறிவித்திருந்தார்.