54,000 மாதசெலவு: தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாவும் போதாது: சஜித்

 

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா நாளாந்த வேதனம் வழங்கப்பட்டாலும், அது போதுமானதல்ல என அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

கண்டி – குண்டசாலையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நான்கு பேரைக் கொண்ட குடும்பமொன்று வாழ்வதற்கு மாதமொன்றுக்கு 54 ஆயிரம் ரூபா அவசியமாகும் என குடித்தொகை கணிப்பீட்டு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், பெருந்தோட்டங்களில் வாழும் தொழிலாளர்களுக்கு, 700 அல்லது 800 ரூபாவை நாளொன்றுக்கு வேதனமாக வழங்கினால் போதுமானது என கூறப்படுகிறது.

அவ்வாறாயின், 30 நாட்கள் பணியாற்றினால், 24 ஆயிரம் மாத்திரமே அவர்களுக்கு வேதனமாக கிடைக்கும்.

இந்த நிலையில், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு ஆயிரம் ரூபா வேதனம் வழங்கினாலும், அது போதாது என அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

தேயிலைத் தொழிற்துறையில் இலாபம் இல்லை என எவறாவது கூறுவாறாயின் அது உண்மைக்குப் புறம்பானதாகும்.

வருமானமும், இலாபமும் அதிகமகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேநேரம், தேர்தல் காலங்களில் மாத்திரம் மலையக மக்கள் குறித்து சிந்திக்கும் நிலைமை உள்ளது.

ஏனெனில், எந்தச் சந்தர்ப்பத்திலும் அவர்கள் கண்களை மூடிக்கொண்டு யானைக்கு வாக்களிக்கின்றனர் என சஜித் பிரேமதாஸ குறிப்பிட்டுள்ளார்.

அவர்கள் மிகவும் பாதிக்கப்பட்ட மக்களாக உள்ளனர்.

இந்த நிலையில், மீண்டும் ஆணையைப் பெற்று பெருந்தோட்ட மக்களின் நலன்புரி உரிமையை உறுதிப்படுத்துவதாக அமைச்சர் சஜித் பிரேதமாஸ குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435