7,000 பட்டதாரி பயிலுநர்களுக்கு தேர்தலின் பின்னர் நியமனம்

பொதுத் தேர்தலின் பின்னர் 7,000 பட்டதாரி பயிலுநர்களுக்கு நியமனக் கடிதங்களை அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்க உள்ளதாக கல்வி அமைச்சர் டளஸ் அலகப்பெரும தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோது அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

47,000 பட்டதாரி பயிலுநர்களுக்கான நியமனக் கடிதங்கள் ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், தற்போது தேர்தல் காலம் என்பதனால், தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆலோசனைக்கு அரசாங்கம் இணங்கியுள்ளது.

இதன்படி, தேர்தல் நிறைவடைந்து இரண்டு வாரங்களின் பின்னர் மேலும் சுமார் 7,000 பட்டதாரி பயிலுநர்களுக்கு நியமனக் கடிதங்களை அனுப்புவதற்கு ஜனாதிபதி, பிரதமர் உட்பட அமைச்சரவை தீர்மானம் மேற்கொண்டுள்ளது.

குறித்த தரப்பினரின் மேன்முறையீடுகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, அது தொடர்பான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பாடசாலை கட்டமைப்புக்கு அவசியமான எண்ணிக்கை இருக்குமாயின், அது எந்த பாடத்துறைக்கு என்பதை அறிந்து அவர்களை இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியும், பிரதமரும், அமைச்சரவைக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக கல்வி அமைச்சர் டளஸ் அலகப்பெரும தெரிவித்துள்ளார்.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435