மின்சாரம்,உட்பட அத்தியவசய பொருட்களுக்கு வரி அதிகரிப்பில்லை

மின்சாரம், குடிநீர் மருந்துவகை உட்பட அத்தியவசியப் பொருட்களுக்கான வரி அதிகரிக்கப்படமாட்டாது என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

அமைச்சரவை தீர்மானங்களை தெரிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று (20) அரசாங்க தகவல் திணைக்கள ​கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ​போது அதில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த நிதி இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேயவர்த்தன இதனை தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், தொலைபேசி கட்டணம் மற்றும் சுகபோக உணவுகளுக்கான கட்டணங்களுக்கான வற்வரி அதிகரிக்கப்படும். இதன்போது சீஸ், பட்டர் உட்பட சுகபோக உணவு­களின் விலைகளில் மாற்றம் ஏற்படும்.

ஒருவர் இரண்டு மூன்று தொலைபேசிகளை பயன்படுத்துகிறார். வசதி இருப்பதாலேயே இவ்வாறு பயன்படுத்துகின்றார். எனவே இத்தகையவர்களுக்கு பாதிப்பிருக்காது.

சர்வதேச பாடசாலைகளுக்கான கட்டணங்களுக்கும் இவ்வரி அதிகரிக்கப்படும். பணம் இருப்பவர்கள் தான் சர்வதேச பாடசாலைகளுக்கு பிள்ளைகளை அனுப்புகின்றனர். எனவே இவ் அதிகரிப்பு அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது.

இவ்வாறு அரச வருமானத்தை அதிகரித்துக் கொள்ளாவிட்டால் எதிர்காலத்தில் அரச ஊழியர்களுக்கு சம்பளத்தை வழங்கவும் பணம் இருக்காது. இலங்கை நலன்புரிகளை தன்னகத்தே கொண்ட பொருளாதார நாடாகும். எனவே அரச வருமானம் அதிகரிக்க வேண்டியது கட்டாயமாகும். இதன்போது நேரடி மற்றும் மறைமுக வரிகள் அறவிடப்படவேண்டியது அவசியமாகும்.

கடந்த பல ஆண்டுகளாக வற்வரி அதிகரிக்கப்பட்டது. இன்று இவ்வரி நூற்றுக்கு 4 வீதமே அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய 15 வீதமாக அது அமையும். என்று அவர் மேலும் தெரிவித்தார்.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435