MOH, PHI, குடும்பநல தாதியர்களுக்கு அஞ்சல்மூல வாக்களிக்க விசேட தினம்

அனைத்து சுகாதார வைத்திய அதிகாரிகளும், பொது சுகாதார பரிசோதகர்களும், குடும்பநல தாதிய உத்தியோகத்தர்களும், பொதுத் தேர்தலில் அஞ்சல்மூல வாக்களிக்க ஜுலை 13 ஆம் திகதி விசேட தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய இதனை அறிவித்துள்ளார்.

முன்னதாக ஜுலை மாதம் 14,15,16,17 ஆகிய திகதிகளில் அஞ்சல்மூலம் வாக்களிக்க தீர்மானிக்கப்பட்டது.

அன்றைய தினம் வாக்களிக்க முடியாதவர்களுக்கு ஜூலை 20 மற்றும் 21 திகதிகளில் வாக்களிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஜுலை 13 ஆம் திகதி, சுகாதார வைத்திய அதிகாரிகள், பொது சுகாதார பரிசோதகர்கள், குடும்பநல தாதிய உத்தியோகத்தர் ஆகியோருக்கு அஞ்சல்மூலம் வாக்களிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் வழிகாட்டல்களுக்கு அமைய, ஏனைய அலுவலகங்களில் நடத்தப்படும் நடைமுறை குறித்து இதன்போது ஆராயப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435