தோட்டத் தொழிலாளர்களுக்கு உரிய சம்பள உயர்வை வழங்காது தொழிலாளர் தின கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு எந்த விதத்தில் நியாயமாகும் என்று மத்திய மாகாணசபை உறுப்பினர் எஸ். இராஜரட்ணம் கேள்வியெழுப்பியுள்ளார்.
மலைய அரசியல்வாதிகள் ஒருவரையொருவர் குற்றம்சாட்டாமல் தொழிலாளர்களின் சம்பள உயர்வை பெற்றுக்கொடுக்க ஒற்றுமையாக முன்வரவேண்டும் என்று புஸல்லாவையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டபோது அவர் தெரிவித்தார்.
பெருந்தோட்டங்களின் எதிர்காலம் தற்போது கேள்விக்குறியாகியுள்ள நிலையில் தோட்டங்கள் வலுவிழக்குமாயின் பெருந்தோட்டத்துறை மக்களின் எதிர்காலமும் வலுவிழக்கும் என்பது சொல்லித்தான் தெரிந்துக்கொள்ள வேண்டும் என்பதில்லை. இதனை கவனத்திற் கொண்டு தோட்டத் தொழிலாளர்களின் மேம்பாடு தொடர்பில் அரசியல் தலைமைகள் கவனம் செலுத்த வேண்டும்.
சம்பள உயர்வினை பெற்றுகொடுக்கும் கடப்பாடு அனைத்த அரசியல் தொழிற்சங்கவாதிகளுக்கும் உள்ளது. கூட்டு ஒப்பந்தத்தின் ஊடாக உரிய சம்பள உயர்வினை பெற்றுகொடுத்த பின்னர் மே தின கூட்டத்திற்கு தொழிலாளர்களை அழையுங்கள் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
வேலைத்தளம்