தமிழ் முஸ்லிம் மக்களின் ஒற்றுமையே அதிகாரப்பகிர்வின் முழுமையைத்தரும் என்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தனின் அறைகூவலை வரவேற்கும் தீர்மானம் உள்ளிட்ட பல தீர்மானங்களை முன்வைத்து அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் மேதினக் கூட்டம் கல்முனையில் இடம்பெறவுள்ளது.
அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் எஸ். லோகநாதன் தலைமையில் மே மாதம் முதலாம் திகதி கல்முனை வை.எம்.சீ.ஏ. மண்டபத்தில் நடைபெறவுள்ள இந்த மேதினக்கூட்டத்தில் தேசியக் கூட்டமைப்பின் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் பிரதம அதிதியாகவும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான சட்டத்தரணி ஆரிப் சம்சுடீன், பேராசிரியர் எம்.இராஜேஸ்வரன் ஆகியோர் கௌரவ அதிதிகளாக கலந்து கொள்ளவுள்ளனர்.
அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கம் ஆரம்பிக்கப்பட்டு 23 வருடங்கள் பூர்த்தியாகும் நிலையில் இச்சங்கத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக விருந்து வரும் இச்சங்க ஆலோசகரும் மூத்த ஊடகவியலாளருமான கலாபூஷணம் ஏ.எல்.எம். சலீல் ஊடகத்துறையில் கால் பதித்து 50 வருடமாவதை குறித்து இவருக்கான கௌரவிப்பு இந்த மேதின நிகழ்வில் இடம்பெறவுள்ளது.
யாழ்ப்பாண, கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்க ளில் உள்ள சங்க பிரதிநிதிகளும் இக்கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர்.
வேலைத்தளம்