அரச ஊழியர்களின் விடுமுறை ரத்து

இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கை நிமித்தம் அனைத்து அரச ஊழியர்களினதும் விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

உள்நாட்டலுவல்கள் அமைச்சில் நேற்று (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அமைச்சர், தற்போதைய நிலைமை சீராக்கப்படும் வரையில் விடுமுறை ரத்து அமுலில் இருக்கும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நிவாரண சேவைகளை உள்நாட்டலுவல்கள் அமைச்சு சரியான முறையில் வழங்காத பட்சத்தில் 1905 என்ற இலக்கத்துடன் தொடர்புகொண்டு முறையிடலாம் என்றும் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் ஆலோசனைக்கமைய நிவாரண  சேவைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435