அரச நிறுவனங்களில் மேலதிக ஊழியர்கள்- சுற்றுநிரூபம் வௌியீடு

திரைசேரி முகாமைத்துவ சேவை திணைக்களத்தின் அனுமதியின்றி அரச மற்றும் அரை அரச சேவை நிறுவனங்களில் ஊழியர்களை கொண்டு நடத்துவது மற்றும் சம்பளம் வழங்குவதை தடை செய்யும் வகையிலான சுற்றுநிரூபம் நேற்று (31) அரசாங்கத்தினால் வௌியிடப்பட்டுள்ளது.

குறித்த சுற்றுநிரூபத்தில் உள்ள ஆலோசனைகளை பாதிக்கும் வகையில் ஊழியர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டால் அந்நிறுவனம் இயங்கும் அமைச்சின் செயலாளர், திணைக்கள பிரதானி, மாகாண பிரதான செயலாளர் மற்றும் நிதிப்பிரிவின் பிரதானி அவ்வூழியர்களுக்கு சம்பளம் வழங்கும் பொறுப்பை ஏற்க ​வேண்டும் என்று திரைசேரி திணைக்களம் வௌியிட்டுள்ள 03/2018 மற்றும் 2018.07.18 திகதியிடப்பட்ட சுற்றுநிரூபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரச சட்டரீதியான நிறுவனங்களில் அனுமதிக்கப்பட்ட ஊழியர் எண்ணிக்கையை விடவும் மேலதிகமாக ஊழியர்களை கொண்டு நடத்தப்படுமாயின் அவர்களுக்கான சம்பளத்தை நிறுவன தலைவர்கள், நிறைவேற்று அதிகாரிகள் மற்றும் கணக்காளர்கள் பொறுப்பேற்க வேண்டும் என்று அண்மையில் அமைச்சரவை தீர்மானம் எட்டப்பட்டிருந்தமை அனைவரும் அறிந்த விடயமாகும்.

மாகாணசபை உட்பட அனைத்து அரச நிறுவனங்களில் அவ்வாறான ஊழியர்கள் இருப்பின் அது தொடர்பில் கவனம் செலுத்தி, அந்நிறுவன ஊழியர்கள் எண்ணிக்கை, அவர்களின் சம்பள விபரங்கள் குறித்த தகவல்களை முகாமைத்துவ சேவை திணைக்களத்திற்கு தெரியப்படுத்துமாறும் அச்சுற்றுநிரூபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435