இ.போ.ச அரச நிறுவனமாக மாற்ற தீர்மானம்

இலங்கை போக்குவரத்து சபையை அரச நிறுவனமாக மாற்றி செயற்படுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடந்த 10ஆம் திகதி பாராளளுமன்றில் தெரிவித்தார்.

இலங்கை போக்குவரத்து சபையை அரச நிதியை பயன்படுத்தி சமூக சேவை செயற்பாடாக முன்னெடுக்க வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. இ.போ.ச 16,000 மில்லியன் ரூபா கடன் பட்டுள்ளது. இக்கடனை மீள செலுத்துவதற்கு வரி அதிகரிக்க வேண்டும். அல்லது வளங்களை விற்க வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

மன்றில் தினேஷ் குணவர்தன எம்பி கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதன் போது கருத்து தெரிவிக்கையில் போக்குவரத்துதுறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, 2148 மில்லியன் ரூபா இ.போ.ச. ஊழியர்களுக்கு பணிக்கொடையாக வழங்க வேண்டியுள்ளது என்று சுட்டிக்காட்டினார். ஊழியர் சேமலாப நிதி செலுத்தப்படாத 400 வழக்குகளுக்கு 10,000 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகை கொடுக்க வேண்டிய தேவை காணப்படுகிறது என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435