பல தினங்களாக மேற்கொள்ளப்பட்ட தபால் ஊழியர் பணிநிறுத்ததினால் தற்போது மத்திய தபால் தலைமையகத்தில் தேங்கியுள்ள 6 இலட்சத்திற்கும் மேற்பட்ட கடிதங்களை விநியோகிக்க இரு தினங்களில் துரித நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஒன்றிணைந்த தபால் ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தபால் ஊழியர்களின் சில கோரிக்கைகளுக்கு தீர்வு வேண்டி கடந்த வாரங்களில் தபால் ஊழியர்களினால் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட வேலை நிறுத்த போராட்டம் காரணமாக நாடளாவிய ரீதியில் உள்ள தபால் நிலையங்களில் 6 லட்சத்திற்கும் அதிகமான தபால்கள் தேங்கி நின்றன.
இவ்வாறு நாடளாவிய ரீதியில் தேங்கி நிற்கும் இந்த தபால்களை எதிர்வரும் இரண்டு தினங்களுக்குள் உரியவாறு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று ஒன்றிணைந்த தபால் ஊழியர்கள் சங்கத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.
வேலைத்தளம்