தற்போது மூடியிருக்கும் 9 தேயிலை சக்தி தேயிலை தொழிற்சாலைகளை தனியார் துறைக்கு கையளிக்க பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு தீர்மானித்துள்ளது.
அதற்கமைய காலி மாவட்டத்தின் வலபந்துவ, எல்பிட்டிய, மாத்தறை மாவட்டத்தின் சிரிலிய மற்றும் மாவரல , களுத்தறை மாவட்டத்தில் அமைந்துள்ள ரைகம், இரத்தினபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள கிலிமலே மற்றும் பலங்கொட, பதுளை மாவட்டத்தின் பஸ்ஸர, கெப்படி பொல ஆகிய தொழிற்சாலைகளே இவ்வாறு தனியார் மயப்படுத்தப்படவுள்ளன.
இத்தொழிற்சாலைகளாவன தேயிலை சக்தி நிதியத்தின் கீழ் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் கீழ் நேரடியாக செயற்பட்டதுடன் நீண்டகாலமாக மூடியிருக்கும் நிலையில் மீண்டும் இயக்கும் நோக்கில் தனியாரிடம் கையளிக்கப்படவுள்ளன.
இத்தொழிற்சாலையை பொறுப்பெடுக்கும் நபர் குறித்த தொழிற்சாலையை முழுமையாக நவீனமயப்படுத்தப்படவேண்டியிருப்பதுடன் கொழுந்து வழங்குநர்களுக்கு வழங்கப்படவேண்டிய பணத்தையும் தொழிற்சாலையில் பணியாற்றியவர்களையே பணியில் இணைத்துக்கொள்வதுடன் அவர்களுக்கு வழங்கவேண்டிய சேமலாப நிதியத்தையும் வழங்குவது அவசியமாகும்.