வட மத்திய மாகாணத்தில் நிலவும் தமிழ் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வி இராஜாங்க அமைச்சர் வி. இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
பொலன்னறுவை தமிழ் மாகாண கல்வ வலயம் உட்பட்ட தமிழ் பாடசாலைகளில் ஆங்கிலம், கணிதம், விஞ்ஞானம், வரலாறு, மொழி மற்றும் சமயம் ஆகிய பாடங்களுக்கு ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகின்றது.
கல்வியியற் கல்லூரிகளில் போதானவியல் கற்கை நெறியை பூர்த்தி செய்த பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கும் போது குறித்த பிரதேசங்களில் நியமனங்கள் வழங்க எதிர்பார்த்துள்ளோம் என்று நேற்றுமுன்தினம் (05) அமைச்சர் பாராளுமன்றில் உரையாற்றிய போது தெரிவித்தார்.
வேலைத்தளம்
நல்லதொரு முயற்ச்சி, வேலையற்ற பட்டதாரிகளுக்கு இது ஓர் நல்ல வாய்ப்பு. மந்திரி அவர்களே உங்கள் முயட்சிக்கு நல்வாழ்த்துகள்.