அனைத்து சுகாதாரத்துறை பணிக்குழுவுக்கும் காப்புறுதி முறைமை

கொவிட்-19 தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் சுகாதாரத் துறை பணியாளர்களுக்கு இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தினால் ‘விரு அபிமன’என்ற பெயரில் 15 இலட்சம் ரூபா பெறுமதியான காப்புறுதி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

உயிரிழப்பு ஏற்படுமாயின், பிள்ளைகள் உள்ள காப்புறுதிக்கு உரித்துடைய, சுகாதார சேவை அதிகாரிகளின் குடும்பங்களுக்கு 15 இலட்சம் ரூபாவும், பிள்ளைகள் இல்லாத குடும்பங்களுக்கு மற்றும் திருமணமாகாதவருக்கும் ரூபாய் 10 லட்சம் வீதம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

சுகாதார அமைச்சின் அதிகாரிகள், வைத்தியர்கள், தாதியர்கள், சிறு ஊழியர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பிரதேச சுகாதார அதிகாரிகள் ஆகியோர் இந்த நடவடிக்கைக்குள் உருவாக்கப்படுகின்றன.

நாட்டு மக்களுக்காக பாதிப்பையும் கருத்திற் கொள்ளாமல் சேவையில் ஈடுபடும் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு இலவசமாக வழங்கப்படும் முதலாவது மற்றும் ஒரேஒரு காப்புறுதி முறைமை இதுவாகும்.

இந்த காப்புறுதி முறைமையின் கீழ் பணம் அறவிடப்படாமல், காப்புறுதி நிறுவனங்களில் தனியாக பதிவு செய்யாமல், அந்தந்த நிலைமைகளுக்கு முகம்கொடுக்கும் சுகாதார அதிகாரிகள், சுகாதார அமைச்சின் கோரிக்கைகள் அடிப்படையில் கொடுப்பனவு வழங்கப்படும்.

‘விரு அபிமன்’ சுகாதார பொறிமுறைமை, சுகாதார அமைச்சில் சுகாதார மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியிடம், இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம் தலைவர் கலாநிதி ஜகத் வெல்லவத்தயினால் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435