ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழக நிருவாக உத்தியோகத்தர்கள், மற்றும் ஊழியர்கள் இணைந்து பல்கலைக்கழக வளாக முன்றலில் அடையாள வேலைநிறுத்தமொன்றை நேற்று (14) மேற்கொண்டனர்.
MAC கொடுப்பனவை அதிகரித்தல், UPF/ EPF மற்றும் ஓய்வூதியக் கொடுப்பனவுக்கு பங்களிப்பு செய்தல், ஆகத் திறனுடைய ஓய்வூதிய திட்டமொன்றை வழங்குதல், வைத்திய காப்புறுதி திட்டத்தை வழங்குதல், 60 வயதுக்கு ஓய்வூதிய வயதை மறுசீரமைப்புச் செய்தல், 2016ம் ஆண்டு அரச சம்பள திட்டத்திற்கு சமனான சுற்றரிக்கையை வெளியிடுதல் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து இவ்வடையாள வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்பட்டது.
கடந்த 6 ஆம் திகதி நடத்தப்பட்ட பல்கலைக்கழக ஊழியர் சங்க சம்மேளன விசேடக்கூட்டத்தில் இம்மாதம் 13, 14 ஆம் திகதிகளில் அனைத்து பல்கலைக்கழகங்களும் அடையாள வேலைநிறுத்தம் ஒன்றை மேற்கொள்வது என்று தீர்மானிக்கப்பட்டது.
தென் கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர் சங்கச் செயலாளர் ஏ.எம் நஸ்வி தலைமையில் பல்கலைக்கழக நிருவாக உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் மற்றும் சங்கப் பிரதிநிதிகள் இவ்வடையாள வேலைநிறுத்தத்தில் கலந்துகொண்டனர்.
வேலைத்தளம்/ தினகரன்