சட்டவிரோதமாக வெளிநாட்டு வேலைவாய்ப்பை நாடி செல்வோரை சுற்றிவளைப்பது தொடர்பில் குருநாகல மாவட்ட அரச அதிகாரிகளை தெளிவுபடுத்தும் செயலமர்வொன்று கடந்த 22ஆம் திகதி நடைபெற்றது.
சட்டவிரோதமாக வெளிநாடு செல்வோரை தடுப்பதற்கு அரச அதிகாரிகளை பயன்படுத்தும் நோக்கில் குருநாகல போயகனே மண்டபத்தில் இச்செயலமர்வு நடத்தப்பட்டது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரிகளினால் நடத்தப்பட்ட இச்செயலமர்வில் குருணாகல மாவட்டச் செயலாளர் காமினி இலங்கரத்ன, குருநாகல வலய பொறுப்பு பொலிஸ் அதிகாரி மகேஷ் சேனாரத்ன, குருநாகல உதவி பிரதேச செயலாளர் ஐ.கே.எம்.எம்.எப். இலங்க சேக்கர, பணியகத்தின் பொது முகாமையாளர் (சட்டம்) சட்டத்தரணி கீர்த்திமுதுகுமாரண,உதவி பொலிஸ் அதிகாரி மற்றும் பணியத்தின் விசேட விசாரணைப் பிரிவின் முகாமையாளர் சித்தக்க குணரத்தன ஆகியோர் கலந்துகொண்டனர்.
வேலைத்தளம்