மக்கள் பணத்தை செலவிட்டு கல்வி கற்பதற்காக வெளிநாடு செல்லும் அரச அதிகாரிகளினால் நாட்டுக்கு சிறந்த சேவை வழங்கப்படுகிறதா என்பதை கண்டறிவதற்கு முறையான திட்டமொன்றை வகுக்க திட்டமிட்டுள்ளதாக அரச நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்தார்.
அரச அதிகாரிகள் 36 பேர் கற்கை நிமித்தம் மலேசியா செல்வதற்கு முன்னர் அமைச்சில் சந்தித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து தெரிவிக்கையில், நாடொன்றை அபிவிருத்தி செய்வதற்கு சிறந்த அரசியல் நோக்கு இருக்க வேண்டும். எனினும் அந்த முன்னேற்றமானது நடைமுறை சாத்தியமானதாகவும் நிரந்தமானதாகவும் இருப்பதற்கு சிறந்த, அதிகாரிகளின் இருப்பிலேயே தங்கியுள்ளது. இன்று நாட்டுக்கு சிறந்த அரசியல் நோக்கு கிடைத்துள்ளது என்று தெரிவித்தார்.
மக்களை வலுவூட்டவது தொடர்பான 10 நாள் பயிற்சி நெறியானது நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அமைச்சுக்கள், மாகாண அமைச்சுக்கள், அரச நிறுவனங்கள் மற்றும் மாகாண அரச நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தகுதி பெற்ற அதிகாரிகள் இப்பயிற்சிக்காக தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
வேலைத்தளம்