சைப்ரஸ் புலம்பெயர் தொழிலாளருக்கு விரைவில் சம்பள உயர்வு

சைப்பரஸில் பணியாற்றும் இலங்கையர்களின் சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பில் அந்நாட்டு தொழிலாளர் மற்றும் சமூக நலன்புரி அமைச்சர் திருமதி செட்டா எமில்லனிடொவிடம் வௌிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் ஊக்குவிப்பு அமைச்சர் தலத்தா அத்துகோரள கோரியுள்ளார்.

அண்மையில் சைப்பரஸிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட அமைச்சர் இவ்வேண்டுகோளை விடுத்துள்ளார். சம்பள அதிகரிப்புக்காக அமைச்சுக்கிடையிலான குழுவொன்றை நிறுவ எதிர்பார்த்துள்ளதாகவும் அக்குழுவினூடாக இலங்கை தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் வௌிநாட்டு தொழிலாளர்களின் நலன்புரிக்காக விசேட வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளது என்று தெரிவித்த அமைச்சர் தொழிலாளர்களுக்கு தேவையான தரமான பயிற்சிகளை வழங்கவும் தீர்மானித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

இரு நாடுகளுக்கிடையிலான இராஜதந்திர உறவுகளில் புரிந்துணர்வை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகவும் அதற்கான ஒத்துழைப்பை இலங்கை அரசு தயாராக உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இவ்விஜயத்தின் போத அந்நாட்டு தொழில் நிறுவன பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடிய அமைச்சர் இலங்கை தொழிலாளர்களை உள்வாங்கும் போது ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பிலும அதற்கான தீர்வுகள் தொடர்பிலும் சைப்ரஸிற்கான இலங்கை தூதரக அதிகாிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து சைப்ரஸில் பணியாற்றும் இலங்கை தொழிலாளர்களையும் சந்தித்து கலந்துரையாடினார். அதன் போது அந்நாட்டின் சமூக பாதுகாப்பு முறைமையை தமக்கு பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பத்தை பெற்று தருமாறு வேண்டுகோள் விடுத்தனர். எதிர்வரும் காலங்களில் இது தொடர்பில் கவனம் செலுத்துவதாக அமைச்சர் உறுதியளித்தார்.

இவ்விஜயத்தின் போது வௌிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையத்தின் தலைவர் லஷ்மன் அபேகுணரத்ன, வௌிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் ஆலோசகர் பத்மினி ரத்நாயக்க, வௌிநாட்டு முகவர் நிலைய பணியாளர் பிரதிநிதி எம்.ஜே.எம் கவஸ், சைப்பரஸுக்கான இலங்கை உயர்ஸ்தானிகரலாய முதல் செயலாளர் பிரசன்ன அபேவிக்கிரம ஆகியோர் கலந்துகொண்டனர்.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435