பெருந்தோட்டத்துறையில் பணியாற்றும் தொழிலாளர்களின் பிள்ளைகளிடமிருந்து புலமைப்பரிசிலுக்கான விண்ணப்பங்களை இந்திய உயர்ஸ்தானிகராலயம் கோரியுள்ளது.
பெருந்தோட்டத் துறை தொழிலாளர்களின் பிள்ளைகளின் கல்வி நடவடிக்கையை மேம்படுத்தும் நோக்கில் இந்திய உயர்ஸ்தானிகராலயம் இப்புலமைபரிசில்களை வழங்குகின்றது.
கல்விப்பொதுத்தராதர உயர்தரம், பட்டப்படிப்பை மேற்கொண்டிருப்பவர்கள், தொழில்நுட்ப கல்வி, அரசாங்க தொழில்நுட்ப கல்லூரியில் தொழில்நுட்பம் சார் கல்விகளை முன்னெடுப்பவர்கள் மேலதிக உயர்கல்விக்காக இப்புலமைப்பரிசிலுக்கு விண்ணப்பிக்கலாம்.
க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் 6 திறமைச் சித்திகள் அல்லது க.பொ.த உயர்தரப்பரீட்சையை 25 வயதிற்குள் பூர்த்தி செய்துள்ளவர்களும் இப்புலமைப் பரிசிலுக்கு விண்ணப்பிக்க முடியும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பிறப்புச் சான்றிதழ், க.பொ.த. சாதாரண தரம், க.பொ.த உயர்தரம் கல்விச் சான்றிதழுடன், தோட்ட நிர்வாகத்தினால் இறுதியாக வழங்கப்பட்ட பெற்றோரின் சம்பளச் சிட்டை பெற்றோர் உரிய தோட்டத்தில் தொழிலாளராக இருக்கின்றனரா என்று தோட்ட முகாமையாளரினால் உறுதிப்படுத்தப்பட்ட சான்றிதழ் ஆகியவற்றின் பிரதிகளை இணைத்து இம்மாதம் 30 ஆம் திகதிக்குள் அனுப்பிவைக்குமாறு கோரப்பட்டுள்ளது.
விண்ணப்பப்படிவங்களை உயர்ஸ்தானிகராலயத்தின் www.hcicolombo.org. என இணையத்தள முகவரியில் தரவிறக்கம் செய்துக்கொள்ள முடியும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை மேற்கூறப்பட்டுள்ள சான்றிதழ்களின் பிரதிகளுடன் இணை த்து இந்திய உயர் ஸ்தானிகராலயம், இலக் கம் 36–-38, காலி வீதி அல்லது உதவி இந் திய உயர் ஸ்தானிகராலயம், இலக்கம் 31, ரஜபிஹில்ல மாவத்தை, கண்டி என்ற முக வரிக்கோ அனுப்பிவைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
வேலைத்தளம்