தாதியர் பட்டப்படிப்பை தனியார் மயப்படுத்துவதற்கான ஒப்பந்தமொன்றில் அரசாங்கம் கைச்சாத்திட்டுள்ளதாக அகில இலங்கை தாதியர் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.
குறிப்பிட்ட ஒப்பந்தம் தொடர்பான மேலதிக விபரங்கள் இன்னும் வௌியாகவில்லை என்று அகில இலங்கை தாதியர் சங்கத் தலைவர் காமினி குமாரசிங்க சுட்டிக்காட்டினார்.
அரச பல்கலைக்கழகங்களினூடாக தாதியர் பட்டப்படிப்பை வழங்குவதை விடுத்து தனியார் மயப்படுத்துவதை தாதியர் சங்கம் கடுமையாக எதிர்ப்பதாகவும் குறிப்பிட்டார்.
வேலைத்தளம்/ அத தெரண