மின்சார பணியாளர்களின் போராட்டம் இன்று ஆறாவது நாளாகவும் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகிறது.
தமது கோரிக்கை கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு கிடைக்கும்வரை பணிப்புறக்கணிப்பை கைவிடப்போவதில்லை என மின்சார பணியாளர்கள் சங்கத்தின் செயலாளர் ரஞ்சன் ஜெயலால் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள மின்சார பணியாளர்களுக்கும் தொழில் மற்றும் தொழிற்சஙக உறவுகள் அமைச்சர் டபிள்யு.டி.ஜே.செனவிரத்னவுக்கும் இடையில் பேச்சுவார்ததையொன்று இடம்பெறவுள்ளது.
பிற்பகல் 2.30 மணியளவில் இந்தப் பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது.