தென்மாகாணத்தில் தமிழ் ஆசிரியர் கிராமம்

மாத்தறை மாவட்டத்தில் ஆசிரியர் கிராமமொன்றை நிறுவ தென்மாகாண கல்வித் திணைக்களம் திட்டமிட்டுள்ளது.

தூர இடங்களிலிருந்து தென்மாகாண பாடசாலைகளுக்கு கடமைக்காக வரும் ஆசிரியர் வாய்ப்பு கருதி இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது..

தென் மாகாணத்தின் தெனியாய கல்வி வலயத்தில் 5 தமிழ் மொழி மூல பாடசாலைகள் காணப்படுகின்றன. அவற்றில் வடக்கு கிழக்கைச் ​சேர்ந்த ஆசிரியர்களே பெரும்பாலும் கற்பிக்கின்றனர். குறித்த காலம் முடிவடைந்தவுடன் ஆசிரியர்கள் மாற்றல் வாங்கி செல்வதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது. அவ்வாசிரியர்கள் நீண்டகாலம் குறித்த பிரதேசத்தில் தங்கியிருந்து கற்பிப்பதற்கு இவ்வாசிரியர் கிராம உதவியாக இருக்கும் என்று தென்மாகாண கல்வித் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

இத்திட்டம் தொடர்பில் கடந்த வாரம் நடைபெற்ற தென்மாகாண அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435