பரீட்சை கடமைகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுக்கு வசதிகளை வழங்குக!

தற்போது நாட்டில் நிலவும் ஆபத்தான நிலையில் க.பொ.த உயர்தர பரீட்சைப் பணிகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுக்கு அவசியமான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று இலங்கை ஆசிரியர் சங்கம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, க.பொ.த உயர்தர பரீட்சை மத்தியநிலையங்களில் கொவிட் 19 தொற்றுள்ள மாணவர்கள் இருந்தமை அடையாளங்காணப்பட்டுள்ளது. கம்பஹா மற்றும் கொழும்பு ஆகிய பிரதேசங்களில் பரீட்சை மத்திய நிலையங்களில் மாணவர்களுக்கு கொரோனா தொற்று இருந்தமை உறுதி செய்யப்பட்டது.

மேல் மாகாணத்தில் தற்போது தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பரீட்சை ஆணையாளர் அறிவித்தது போல் பொதுப்போக்குவரத்து சேவை இயங்கவில்லை. பரீட்சை கடமையில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் தமது சொந்த பணத்தை போக்குவரத்துக்கு பயன்படுத்தவேண்டிய நிலை ஏற்பட்டது.

மாணவர்களை பரீட்சை மத்திய நிலையங்களுக்கு அழைத்துச் செல்வதற்கு பெற்றோருக்கும் அதிக பணம் செலவாகியுள்ளதுடன் அவர்கள் பாரிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டியிருந்தது. குறிப்பாக ஒக்டோபர் மாதம் 31ம் திகதி அதிக எண்ணிக்கையான மாணவர்கள் தோற்றிய கணக்கீடு பரீட்சை நடைபெற்றது. மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டமையினால் மாணவர்கள் மாத்திரமன்றி பரீட்சை கடமைகளில் ஈடுபட்டு வந்த அதிகாரிகளும் கடுமையான கஷ்டங்களுக்கு முகங்கொடுக்கவேண்டியேற்பட்டது. நாட்டின் நிலையை கருத்திற்கொண்டு ஆசிரியர்களுக்கு போக்குவரத்து கொடுப்பனவொன்றை வழங்குமாறு தொடர்ச்சியான எமது சங்கம் வலியுறுத்தி வந்தது. இதன்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பிரதேசங்களில் பரீட்சை கடமைகளில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு போக்குவரத்து கொடுப்பனவு வழங்குவது தொடர்பில் பரீட்சை ஆணையாளர் அறிக்கையொன்றை வௌியிட்டிருந்தார். பின்னர் குறுந்தகவலினூடாக மாற்றப்பட்டுள்ளமையினால் இவ்விடயம் தொடர்பில் ஒரு தௌிவற்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் போக்குவரத்து கொடுப்பனவு தொடர்பில் பரீட்சை ஆணையாளர் சுற்றுநிரூபம் ஒன்றை வௌியிடவேண்டிய அவசியம் தோன்றியுள்ளது.

மேலும், தனிமைப்படுத்தப்பட்டுள்ள மாணவர்கள் மற்றும் கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்ட மாணவர்களுடன் கடமையில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு கொவிட் 19 தொற்று ஏற்படும் அபாயம் காணப்படுகின்றது. அம்மாணவர்களுடன் கடமையில் ஈடுபடும் ஆசிரியர் அதிபர்களுக்கு PCR பரிசோதனை மேற்கொள்ளவேண்டியுள்ளபோதிலும் அதற்கான உரிய வேலைத்திட்டம் இல்லை. இந்நிலையில் அவர்கள் தனியார் வைத்தியசாலைகளில் PCR பரிசோதனை செய்யவேண்டியுள்ளது, அதற்காக 9500 ரூபா பணத்தை செலவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

க.பொ.த உயர்தர பரீட்சை நவம்பர் 6ம் திகதி வரை நடைபெறவுள்ள நிலையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள மற்றும் கொவிட் 19 தொற்றுக்குள்ளான மாணவர்களுடன் பரீட்சைக் கடமைகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுக்கு PCR பரிசோதனைக்கு செலவிட்ட பணத்தை மீளபெறல் வசதியேற்படுத்திக் கொடுக்கவேண்டும் என்றும் அதிகாரிகள் யாருக்காவது உடனடியாக PCR பரிசோதனை தொடர்பில் தௌிவான நடைமுறையொன்றை பரீட்சை ஆணையாளர் அறிவிக்கவேண்டும் என்றும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435