சட்ட விரோத ஆட் கடத்தல் சந்தேக நபர் இந்தியாவில் கைது

இலங்கை உட்பட பல நாடுகளில் சர்வதேச ரீதியாக மனிதக்கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த பிரதான நபர் ஒருவர் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெண்களிடம் பணம் பெற்றுக்கொண்டு மத்திய கிழக்கு நாடுகளுக்கு சட்டவிரோதமாக வேலைக்கு அனுப்பி வந்த குறித்த நபர் கைது செய்யப்படும் போது சட்ட விரோதமாக வௌிநாடுகளுக்கு அனுப்புவதற்கு தயார் நிலையில் இருந்த 26 பெண்களையும் இந்திய பொலிஸார் மீட்டுள்ளனர்.

சுமார் 51 வயது மதிக்கத்தக்க குறித்த நபருடைய சட்ட விரோத மனிதக்கடத்தல் நடவடிக்கைக்கு உதவி வழங்கிய அவருடைய மனைவியும் இதன்போது கைது செய்யப்பட்டார்.

இந்நபர் கடந்த 2011 ஆம் ஆண்டு தொடக்கம் இலங்கை, இந்தியா, நேபாளம் ஆகிய நாடுகளில் இம்மனித கடத்தல் வியாபாரத்தை வெற்றிகரமாக நடத்தி வந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435