முடிவுக்கு வந்தது சுங்கத் திணைக்கள பிரச்சினை!

சுங்க அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்டு வந்த சட்டப்படி வேலைநிறுத்தம் நிறைவுக்கு வந்துள்ளது.

தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடி சுங்க சட்டத்தில் திருத்தம் கொண்டுவருவது தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என்று நேற்று பிற்பகல் (23) நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க எழுத்து மூலம் உறுதியளித்ததையடுத்து இத்தீர்வு எட்டப்பட்டுள்ளது.

சுங்கத் திணைக்கள செயற்பாடுகளை செயற்படுத்துவது தொடர்பில் புதிய சட்டமொன்றை உருவாக்க நிதியமைச்சு திட்டமிட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து திணைக்களத்தில் உள்ள 9 தொழிற்சங்கங்களில் 8 திணைக்களங்கள் கடந்த 19ஆம் திகதி போராட்டங்களை ஆரம்பித்தன.

இதனால் திணைக்கள செயற்பாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டதுடன் நாளொன்றுக்கு சுமார் ஒரு பில்லியன் ரூபா நட்டமேற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. புதிய சட்டத்தை சட்டத்தை உருவாக்குவதற்கு எதிராக நேற்று (23) லேக்ஹவுஸ் சுற்றுவட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435