இலங்கையில் அதிகரித்துவரும் வீதி விபத்துக்கள் மற்றும் அதனால் ஏற்படும் உயிரிழப்புக்கள் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் கவனயீர்ப்பு போராட்டமொன்றை யாழ்ப்பாணத்தில் நடத்த அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.
அதற்கமைய எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 10ஆம் திகதி காலை 10.00 மணி தொடக்கம் 11.00 மணி இக்கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்படவுள்ளது.
அன்றைய தினம் அனைவரும் அவரவர் பணியாற்றும் அலுவலகங்களுக்கு முன்பாக வீதி விபத்துக்கள் தொடர்பில் விளிப்புணர்வை ஏற்படுத்தும் பதாதைகளை தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளுமாறு வைத்தியர்கள் சங்கம் கோரியுள்ளது.
மேலும் விபத்துக்கள் தொடர்பான மனுவொன்றை அரசாங்க அதிபரினூடாக ஜனாதிபதிக்கு அனுப்பவும் பிரதிகளை பிரதமர், எதிர்கட்சித் தலைவர் ஆகியோருக்கும் அனுப்பவுள்ளதாகவும் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
வேலைத்தளம்