பிரபல அரச வங்கியொன்றில் பணியாற்றிய காரியாலய உதவியாளர் இருவருக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டுள்ளனர் என்று டெய்லி மிரர் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த வங்கியில் பணியாற்றும் சட்ட அதிகாரியொருவரே இத்தகைய கீழ்தரமான செயலில் ஈடுபட்டார் என்று தெரிவிக்கப்படுகிறது. இச்சட்ட அதிகாரிக்கு எதிராக வங்கி முகாமைத்துவத்துக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதையடுத்து பாதிக்க பெண்களுக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளார் என்றும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதில் ஒரு பெண் கருத்து தெரிவிக்கையில் குறித்த முறைப்பாடு முகாமைக்கு கிடைக்கப்பெற்றதையடுத்து மிக அருகில் வந்தது மிகவும் கேவலமான முறையில் குறித்த அதிகாரி தன்னை ஏசியதாகவும் அம்முறைப்பாட்டை தான் அனுப்பவில்லை என்று தெரிவித்தபோதிலும் குறித்த அதிகாரி அதனை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் மீரிகம பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.