பட்டதாரிகளும் டிப்ளோமாதாரிகளும் மட்டுமே கல்வித்துறையில்

இனிவரும் காலங்களில் பட்டதாரிகளும் டிப்ளோமாதாரிகளும் மட்டுமே கல்வித்துறையில் இணைத்துக்கொள்ளப்படுவார்கள் என்று கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

கல்வியியற் கல்லூரிகளில் ஆசிரிய டிப்ளோமா பயிற்சியை பூர்த்தி செய்த 3545 டிப்ளோமாதாரிகளுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு நேற்று (20) கல்வியமைச்சர் தலைமையில் அலரி மாளிகையில் நடைபெற்றபோது கருத்து தெரிவித்தபோதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அதேபோல் கல்வி மட்டத்திற்கேற்ப சம்பள அதிகரிப்பையும் மேற்கொள்ள விசேட திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கு மற்றும் மலையகம் உட்பட அனைத்து பிரதேசங்களிலும உள்ள 20 தேசிய கல்வியியற் கல்லூரிகளில் 2014ம் ஆண்டு கல்வியாண்டில் அனுமதிக்கப்பட்டு 2017ம் ஆண்டில் டிப்ளோமா பட்டம் பெற்றவர்களுக்கு நியமனங்கள் வழங்கப்பட்டன

தமிழ் மொழி மூலம் கல்வியியல் டிப்ளோமாவை பூர்த்தி செய்த 1200 பேர் நியமனம் பெற்றுள்ளனர்.

வட மாகாண தேசிய கல்வியியற் கல்லூரியில் 877 பேரும் கிழக்கு தேசிய கல்வியியற் கல்லூரியில் 360 பேரும் தர்கா நகர கல்வியியற் கல்லூரியைச் சேர்ந்த 147 பேரும் தமிழ் மொழி மூல டிப்ளோமாவை பூர்த்தி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435